111.The Palm Fibre

  1. அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்
  2. அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது
  3. வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்
  4. விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ
  5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்)